bigg-boss-ajith-740x431

வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் வசிக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்ஸெப்ட்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இது புதிய அனுபவமாக இருந்ததாலோ என்னவோ… பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

கள்ளக்காதல் சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களைப்போலவே வெளியுலக தொடர்புகளே இல்லாமல் மாதக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் ஒருவரைப்பற்றிச் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.

அவர் வேறு யாருமல்ல…. நடிகர் அஜித்குமார்தான்.

தமிழ்நாட்டு மக்கள் அவரை தல என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் அவரால் சுதந்திரமாக வெளி வர முடியவில்லை.

பிக்பாஸ் பாஷையில் சொன்னால்… ஓடவும் முடியலை… ஒளியவும் முடியலை….

எனவே, படப்பிடிப்பு அல்லது டப்பிங் போன்ற தொழில்சார்ந்த வேலை இல்லை என்றால் வீட்டைவிட்டு வெளியவே வர மாட்டார் அஜித்.

வீட்டுக்குள்ளேயே நேரத்தை செலவிட்டாலும் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாராம்.

அடிப்படையில் மெக்கானிஸம் மீது அதீத ஆர்வம் கொண்டவர் அஜித்.

சினிமாவில் இத்தனை உச்சம் தொட்ட பிறகும் அவருக்குள் இருக்கும் மெக்கானிக்கை நடிகர் அஜித்தினால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வீட்டில் இருக்கும்போது மெக்கானிக் அஜித் முழித்துக்கொள்ள, எலக்ட்ரிகல், பிளம்பிங், பெயிண்டிங் என வீட்டிற்கு தேவைப்படுகிற மராமத்து வேலைகளை தானே பார்க்க ஆரம்பித்துவிடுகிறாராம்.

ரிப்பேரிங் வேலைக்கு என்ன பொருள் தேவையோ… அவற்றை தன்னுடைய உதவியாளரை அனுப்பி வாங்கி வரச் சொல்வாராம்.

வீட்டில் உள்ள மோட்டார் உட்பட பல்வேறு எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்களை பிரித்துப்போட்டு அவற்றை ரிப்பேர் செய்வதில் ஈடுபடும் அஜித், சில நேரங்களில், சமையல் செய்ய விரும்பி மணிக்கணக்கில் சமையல் செய்வாராம்.

பெரும்பாலும், வார இறுதி நாட்களில் அவருடைய குடும்பத்தினர் ருசிப்பது அஜித்தின் சமையலைத்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தன்னுடைய உறவினர்களை டின்னருக்கு அழைத்து, அவர்களுக்கு தன் கைப்பட்ட சமைத்த உணவுகளை பரிமாறி சந்தோஷப்படுவாராம் அஜித்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி போன்றவர்களின் நட்பு கடைசியில் துரோகத்தில் முடிந்ததால், அதன் பிறகு திரையுலகில் அவர் யாரையும் நம்புவதில்லை. நட்பு கொள்வதும் இல்லை.

நட்புகள் யாருமில்லாததினாலோ என்னவோ சொந்த வீட்டுக்குள் இருப்பதே சொர்க்கம் என்ற முடிவுக்கு வந்த அஜித், அதன்படியே தன்னுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டுவிட்டார்.

இன்றைய தேதியில் சினிமாவில் அஜித்தின் நண்பர் என்றால்… அது ‘மிர்ச்சி‘ சிவா ஒருவர்தான்.

மங்காத்தா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம், பின்னர் அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு நெருக்கமானார்கள்.

சினிமா சம்மந்தப்பட்டவர்களின் நல்லது கெட்டதுகளுக்கு வராத அஜித், மிர்ச்சி சிவாவின் திருமணத்துக்கு வந்ததன் காரணம் இதுவே.

ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் மிர்ச்சி சிவாவின் அலுவலகத்துக்கு அவ்வப்போது இரவு நேரங்களில் வருகை தருகிறார் அஜித்.

அவர் வருகைக்காகவே அஜித்துக்குப் பிடித்தமான வெளிநாட்டு மதுவகைகளை வாங்கி வைத்திருப்பாராம் மிர்ச்சி சிவா.

சியர்ஸ் என்று பார்ட்டி ஆரம்பித்தால் முடிவதற்கு நள்ளிரவாகுமாம். மிர்ச்சி சிவா அலுவலகத்துக்கு அஜித் வருவது அண்டைவீட்டுக்குக் கூட தெரியாது.

இந்த ரிலாக்சேஷன்கூட ரெகுலராக இல்லை. மிக அபூர்வமாகத்தான் என்கிறார்கள் மிர்ச்சி சிவாவின் நண்பர்கள்.

மற்றபடி வீட்டைவிட்டு வெளியேபோகாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டுக்குள்ளேயேதான் அடைந்து கிடக்கிறார் அஜித்.

Comments

comments