zzdt9NFObigbgbgois

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்றைய தினத்தில் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

ஒரு சிலரது குடும்பங்களை உள்ளே வரவழைத்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் பிக்பாஸ்.

இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களுக்கு கண்ணீர் மல்க காட்சித் தருகின்றனர். இதற்குக் காரணம் என்ன என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்…

ஒருவேளை இன்றைய டாஸ்க்கில் ஒன்றாக இருக்குமா?… அல்லது ஆர்த்தியின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளாரா?… அல்லது போட்டியாளர்களின் வீட்டில் துக்க நிலை ஏற்பட்டிருக்குமா?.. என்ற கேள்வி எழுந்தது. இதில் சினேகன் அப்பா, அப்பா என்று கதறுவது போன்று அதற்கு சக போட்டியாளர்கள் ஆறுதலளிக்கும் வகையிலும் காட்டியுள்ளனர். எனவே இன்று வீட்டிற்குள் வந்திருப்பது சினேகன் தந்தை தான் என்பது தெரிய வந்துள்ளது.

 

Comments

comments