lkAbIlb3afafafdas

பிக்பாஸ் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும், தொடக்கத்தில் இருந்த சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், சுஜா, பிந்துமாதவி, ஹரிஷ் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற தீவிர முனைப்பு காட்டி வருகிறார்கள்.

ஆனால், வெற்றி டிக்கெட் பெற்றதன் மூலம் சினேகன் நேரடியாக இறுதிசுற்றுக்கு சென்றுவிட்டார். இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில், கணேஷ்வெங்கட்ராமிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி, வீட்டில் உள்ளவர்களிடம் கணேஷ் வெங்கட்ராம் எதையாவது கூறி சமாதனம் செய்து அவர்களின் நான்கு ஜோடி காலணிகளை வெட்டி பயன்படுத்த முடியாதபடி செய்ய வேண்டும்.

இந்நிலையில், கணேஷ் வெங்கட்ராம் சுஜாவிடம் காலணிகளை கொடுப்பவர்களுக்கு வெற்றிபுள்ளிகள் தரப்படும் என கூறியிருப்பார் போல தெரிகிறது. இதனால், நடிகை சுஜா தனக்கு வெற்றிப்புள்ளிகள் வேண்டும் என்பதற்காக தனது காலணிகளை வெட்டிக்கொள்ளுங்கள் என்று கணேஷ் வெங்கட்ராமிடம் கூறுகிறார்.

இதனை பார்த்த ஆரவ், பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பதற்கு தனது தலையில் உள்ள மொத்த முடியையும் மொட்டையடித்துகொள்ள சொன்னாலும் சுஜா தயாராக இருக்கிறார் என்று சக பிக்பாஸ் போட்டியாளர்களிடம் சுஜாவை பற்றி கேவலாமாக பேசுகிறார்.

Comments

comments