4QP7NeQbsuja

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடிகை சுஜா வெளியேற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

ஆனால் அதற்கு பிறகு அவரை கூட்டிச்சென்று ஒரு ரகசிய அறையில் ஒழித்து வைத்துவிட்டார். இந்த விடயம் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது.

பிக் பாஸ் வீட்டில் நடப்பதை அவர் அந்த ரூமில் உள்ள டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அவரால் வீட்டில் உள்ளவர்களிடம் பேச முடியாது.

உணவு உள்ளிட்டவை பிக் பாஸ் குழுவால் சுஜாவுக்கு வழங்கப்படும். சில நாட்கள் கழித்து சுஜா மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்படுவர். ஆனால் எதற்கான சுஜா தனிமை படுத்தப்பட்டார் என்பது தெரியவில்லை.

அதனால், அவர் இன்னும் பிக் பாஸ் போட்டியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என கமல் கூறியது, சுஜாவுக்கு ஆறுதலாக இருந்தது.

Comments

comments