Vivegam_ajith-740x431 (1)

சினிமாவின் வெற்றி என்பது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பொய்யாய் புளுகுவது இல்லை.

கல்லாப்பெட்டி நிறைந்தால்தான் வெற்றி. அதே கல்லாப்பெட்டி கரன்ஸிகள் ஏதுமின்றி காலியாகக் கிடந்தால்… தோல்வி.

இந்த உண்மையை அண்மையில் உரக்கச்சொன்ன படம் அஜித்குமார் நடித்த விவேகம்.

சுமார் 80 கோடியில் தயாரிக்கப்பட்டு, 100 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்பட்டது.

இந்த 100 கோடியில் தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் 55 கோடிக்கு விற்கப்பட்டது.

55 கோடியை முதலீடு செய்தவர்கள் தங்களுடைய முதலீட்டை திருப்பி எடுக்க வேண்டும் என்றாலே விவேகம் படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை வசூலிக்க வேண்டும்.

முதல்நாள் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தும், விவேகம் குப்பைப்படமாக இருந்ததால் இரண்டாவது நாளே வசூலில் மிகப்பெரிய வீழ்ச்சியடைந்தது.

அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் குறைந்ததால், தமிழக ஏரியாவை வாங்கிய விநியோகஸ்தர்கள் மட்டுமே 30 கோடி நஷ்டப்பட்டனர்.

இந்த 30 கோடியில் 10 கோடி நஷ்டத்தை தங்களுடைய தலைஎழுத்து என்று ஏற்றுக்கொண்டவர்கள் எஞ்சிய 20 கோடி நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என்று சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கேட்டு வருகிறார்கள்.

அங்கிருந்து பாசிட்டிவ்வான பதில் வராதநிலையில், “நீங்க பொறுப்பு ஏத்துக்கலைன்னா பரவாயில்லை… நாங்க அஜித்கிட்ட பேசிக்கிறோம்…” என்று அதிரடியாய் அறிவித்துள்ளனர்.

“அய்யோ வேண்டாம் அப்படி எல்லாம் எதையும் பண்ணிடாதீங்க…. உங்களை எல்லாம் நாங்கதான் தூண்டிவிட்டோம்னு அஜித் என்னை தப்பா நினைப்பார்.”

என்று சொன்ன சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்,

“ஆரம்பம் படம் ப்ளாப்பானதால்அடுத்து எப்படி கமர்ஷியலா வீரம் படத்தைக் கொடுத்தாரோ அதேமாதிரி எங்களுக்கு கமர்ஷியலா ஒரு படம் பண்ணிக் கேட்டிருக்கேன். காரியத்தைக் கெடுத்திடாமல், கொஞ்சம் பொறுமையா இருங்க. அஜித்கிட்ட பேசிட்டு சொல்றேன்…”

என்று நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை அமைதி காக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

அந்த உத்திரவாதத்தை நம்பி தற்போது அமைதியாகி இருக்கும் விநியோகஸ்தர்கள் அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

அதில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க காத்திருக்கிறார்கள்.

Comments

comments