2ZQNnVIfoh-mu-god-660x330

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.ஜெய் கூட அஞ்சலிக்கு தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

அதெல்லாம் சரிதான்.

ஆனால், தற்போது தன் மனதிற்கு பிடித்தவரை இதுவரை நான் பார்கவில்லை அஞ்சலி தெரிவித்துள்ளார். தனது சினிமா பயணம் நன்றாக சென்று கொண்டிருப்பதால் காதல், கல்யாணம் பற்றி நினைக்க நேரம் இல்லை என்கிறார் அஞ்சலி. மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவே இல்லை என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

என் மனதிற்கு பிடித்தவரை தேடிக் கொண்டே இருக்கிறேன். அவர் இன்னும் என் கண்ணில் படவில்லை. நாளையே அவர் என் கண்ணில் பட்டுவிட்டால் நிச்சயம் அனைவரிடமும் கூறுவேன் என்கிறார் அஞ்சலி.

நானும், அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டாலும் செய்வோம் என்று ஜெய் சொன்னது எனக்கு தெரியாது. என்னையும், அவரையும் சேர்த்து நிறைய செய்திகள் வந்துவிட்டது, போதும் என்று அஞ்சலி கூறியுள்ளார்.

இந்த விஷயம் ஜெய்-க்கு தெரிந்தால் ஹார்ட்-அட்டாக்கே வந்துவிடுமே..!

டைம் டு ப்ளே “இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா..

Comments

comments