வீரம்’, ‘வேதாளம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்திருக்கும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ‘சர்வைவா’, ‘தலை விடுதலை’ போன்ற பாடல்கள், சாவன் மற்றும் யூடியூப் தளங்களில் அதிக வியூஸ் பெற்ற பாடல்களாகியிருக்கின்றன.

அஜித்தின் விவேகம் டீசர் வெளியாகி 6லட்சத்து லைக்ஸ் வாங்கி உலக சாதனை படைத்தது. இந்த உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் தலயை கொண்டாடி மகிழ்ந்தார்கள். அஜித் டீசர் வெளியாகி நான்கு மாதங்கள் கழித்துதான் இந்த எண்ணிக்கையை தொட முடிந்தது.

பல நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.இந்த நிலையில் வியாழன் 12:01-க்கு மணிக்கு ‘விவேகம்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. தற்போது வரை இந்த டிரைலரை 13,132,493 பேர் பார்த்துள்ளனர். 501k டிரைலரை லைக் செய்துள்ளனர்.

அதாவது டிரைலர் வெளியானதில் இருந்து இது வரைக்கும் 501k லைக் செய்துள்ளனர். உலகிலேயே, தமிழ் சினிமாவில் எந்தவொரு படத்தின் டிரைலரும் 501k லைக்குகளை இதுவரை பெற்றதில்லை. முதன்முறையாக, தமிழ் சினிமா வராலற்றில், விவேகம் படத்தின் டிரைலர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்தார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டது . இந்தப் படம், ஹாலிவுட் தரத்தில் எடுத்தனர். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் இருந்த்தது அஜித் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இருந்தது . யூ/ஏ சான்றிதழ் பெற்று ‘விவேகம்’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது.

ajith vivegam

அஜித்தின் விவேகம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி இப்போதும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.படம் மற்றும் அஜித்தின் உழைப்பு பற்றி உங்களுக்கே தெரியும். அதுவும் ஹாலிவுட் பட சாதனைகளையும் முறியடித்து உலகிலேயே அதிகம் லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற பெருமையை பெற்றிருந்தது.

தற்போது என்ன விஷயம் என்றால் படத்தின் டிரைலர் 501K லைக்ஸ் பெற்றிருக்கிறது. டீஸர் 603K பெற்றுள்ளது, டிரைலர் 501K பெற்ற முதல் படம் இதுதான் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.தற்போது ரசிகர்களும் #VIVEGAMTrailerHits500KLikes என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்

Comments

comments