UJkKFvmpamla-720x445

இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்த பின்னர் அமலா காட்டில் அடைமழைதான். அதன் பிற்கு எக்கச்சக்க வாய்ப்புகள். இடையில் இந்தியில் காலடி எடுத்து வைக்க முயற்சித்து மும்பையில் ஃபைவ்ஸ்டார் ஹோட்டல்களில் அறையெடுத்து தங்கி பாலிவுட் ஸ்டார்களுக்கு பார்ட்டிவைத்து வாய்ப்பு தேடினார். பார்ட்டியை அனுபவித்த பாலிவுட் பச்சான்கள் வாய்ப்பு தந்த பாடில்லை. ஆனாலும் தமிழில் தடதடத்து பாய்ந்து நடித்து எல்லாம் தனுஷ் தனுஷ் மயம் என்கிறது கோலிவுட். எல்லாம் கணவருக்கு செய்த துரோகத்தால் வந்த பலன் என்கிறது திரையுலகம். நிஜத்தில் இப்படி என்றால், திரைப்படத்திலும் அப்படியே நடித்திருக்கிறார் அமலாபால்.

திருட்டுப்பயலே 2 படத்தில் அமலாபாலுக்கு பிர்சன்னா தான் கணவர். ஆனால் சைபர் க்ரைம் போலீசில் இருக்கும் பாபி சிம்ஹாவுடன் தொடர்பு ஏற்பட்டு கணவனுக்கு துரோகம் செய்வதுதான் கதை. பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா நடித்துள்ள படம் திருட்டுப்பயலே-2. இந்த படத்தின் முதல் பாகத்தில் பிளாக் மெயில் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கியிருந்த சுசிகணேசன், இந்த இரண்டாவது பாகத்தில் இணையதளத்தினால் பெண்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சம்பந்தமான ஒரு கதையை படமாக்கியிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அமலாபால், பல கவர்ச்சிகரமான காட்சிகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி அமலாபால் கூறுகையில், திருட்டுப் பயலே-2 படம் நல்லதொரு சமூக அக்கறையுள்ள கதையில் உருவாகியிருக்கிறது. இதில் என் இமேஜை கெடுக்கும் வகையிலான காட்சிகள் எதுவும் இல்லை. குறிப்பாக இன்றைய பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கதையில் ஒரு குடும்பப்பெண்ணாகவே நடித்துள்ளேன். அதேபோல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன் என்றார் அமலாபால்.

Comments

comments