அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் படத்தில் காமெடி இல்லை என்றாலும், அதில் நகைப்புக்குரிய விஷயங்கள் நிறைய இருந்தன.

அவற்றில் முக்கியமானது…. அஜித்குமார், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள்.

கதைப்படி இருவரும் கணவன், மனைவியாக இருந்தாலும், மொழி தெரியாத ஒருவர் பார்த்தால்…. அஜித்குமார், காஜல் இருவரையும் அப்பாவும் மகளும் என ஏடாகூடமாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து எக்கச்சக்கமாகவே இருந்தது.

காரணம்… வேறு என்ன? அஜித்குமாரின் தோற்றம்தான்.

என்னதான் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருந்தாலும், முற்றிலும் நரைத்த தலைமுடியுடன் ஏறக்குறைய ஒரு முதியவராகவே படம் முழுக்க காட்சியளித்தார் அஜித்குமார்.

அதிகமாக டீ சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ, அஜீத்குமாரின் தலைமுடிகள் சீக்கிரமே நரைக்கத் தொடங்கின.

C_Zrs9-UQAAHLVe-e1504112858127

ஆங்கிலப்படத்தை காப்பியடித்து படம் எடுக்கும் வெங்கட்பிரபுவுக்கு அஜித்குமாரை வைத்து ‘மங்காத்தா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவரது கண்களுக்கு நரைத்தமுடியுடன் இருந்த அஜித்குமார், ஹாலிவுட் நடிகரைப்போல் தோன்றியிருக்க வேண்டும்.

சால்ட் அண்ட் பெப்பர் என்று பெருமைபேசி, மங்காத்தா படத்தில் நரைமுடியுடன் அஜித்குமாரை நடிக்க வைத்தார்.

அந்தப் படத்தின் வெற்றி கொடுத்த தைரியமும்…. வெற்றிசென்ட்டிமெண்ட்டும் சேர்ந்துகொள்ள அடுத்தடுத்த படங்களிலும் நரைத்தமுடியுடனே நடிக்க ஆரம்பித்தார் அஜித்குமார்.

அதுமட்டுமல்ல, நரைத்த தலைமுடியுடன் நடிப்பதால் கதாநாயகியை துரத்தித் துரத்தி காதலிக்கும் வேடங்களில் நடிக்க மாட்டேன்…. என் தலைமுடிக்கு ஏற்ப மெச்சூர்டான கேரக்டராக இருந்தால்தான் நடிப்பேன் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் கண்டிஷன் போடவும் ஆரம்பித்தார் அஜித்குமார்.

அதன்படியே, தான் நடிக்கும் படங்களின் கதைகளையும், தன்னுடைய கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் அஜித்குமாரை இந்த விஷயத்துக்காக நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

அதே நேரம், வீரம் படத்தில் தமன்னா, மங்காத்தா படத்தில் த்ரிஷா (இவர் இளசு பட்டியலில் வருவாரா?) வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், விவேகம் படத்தில் காஜல் அகர்வால் என தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் மட்டும் ‘இளசாக’ இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். (நல்லவேளை அவர்களுக்கும் நரைமுடி விக் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.)ajiths-vivegam-9-days-chennai-city-box-office-collection-report-photos-pictures-stills

சினிமாவில் நடிக்கும் நேரம் தவிர, படப்பிடிப்பு இல்லாதபோதும், பொது இடங்களுக்கு வரும்போதும், விக் வைத்துக் கொள்வது… மேக்கப்போட்டுக் கொள்வது என்று ‘ஹீரோ இமேஜுக்கு’ பங்கம்வராமல் எந்நேரமும் நடிகனாகவே வலம் வந்தனர் – கடந்த தலைமுறை கதாநாயக நடிகர்கள். (எம்.ஜி.ஆர். தொப்பி போட்டுக்கொண்டதெல்லாம் இந்த வகைதான்)

சத்யராஜ், ரஜினி போன்றவர்கள் இதை உடைத்தெறிந்துவிட்டு தங்களுடைய நிஜமான தோற்றத்துடன்… அதாவது வழுக்கைத்தலையுடன் பொது இடங்களுக்கு வரத் தொடங்கினர்.

நரைத்த தலைமுடியுடன் அஜித்குமார் நடமாடுவதும்கூட இந்தவகைதான்.

 

நடிகன் என்பவன் எந்நேரமும் வேஷம் போட்டுக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை…

நிஜவாழ்க்கையில் அரிதாரமற்ற அசல்முகத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணுகிற இவர்களை மனசார பாராட்ட வேண்டும்.

அதே நேரம், அஜித்குமாருக்கு மட்டும் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.

சினிமா என்பது வியாபாரம். உங்களைப்போன்ற ஹீரோக்களை நம்பியே அதில் கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகிறது.

விவேகம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் உங்களுக்கு 35 கோடியைக் கொட்டிக் கொடுக்கிறார்… 80 கோடி செலவு செய்து அந்தப் படத்தை தயாரிக்கிறார் என்றால்… உங்களை நம்பியும், உங்கள் முகத்தை நம்பியும்தானே தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

உங்களை நம்பி இத்தனை கோடியை செலவு செய்கிற தயாரிப்பாளருக்காக தலைமுடிக்கு சாயம் பூசி நடித்தால் என்ன?

நரைமுடிக்கு சாயம் பூச மாட்டேன் என்றால் நீங்கள் என்ன 60 வயது முதியவர் வேடத்திலா நடிக்கிறீர்கள்?

நரைமுடியுடன், வழுக்கைத்தலையுடன், மொட்டைத்தலையுடன் என நிஜத்தில் ஒரு நடிகன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சினிமாவில் நடிக்கும்போது, ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தன்னை மாற்றிக் கொள்பவன்தான் நடிகன்… நல்ல கலைஞன்.

நரைத்த முடி என்பதற்காக சாயம் பூச மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நீங்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும் அஜித்.

 

சத்யராஜ் போலவோ, ரஜினி போலவோ நீங்கள் வழுக்கைத்தலையுடன் இருந்திருந்தால்…. இப்போது சொல்வதுபோல், விக் வைத்து நடிக்க மாட்டேன்… என்னுடைய ஒரிஜினல் கெட்டப்பான சொட்டைத்தலையுடன்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்திருப்பீர்களா?

இப்படி சொல்வதற்கு நீங்கள் வெவரம் இல்லாதவர்களும் இல்லை….

விக் வைக்காமல் சொட்டைத்தலையுடன்தான் நடிப்பேன் என்று சொல்கிற ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் வெவஸ்தைகெட்டவர்களும் இல்லை.

சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நேர்மையாக இருக்கிறோமோ இல்லையோ…. ஏற்கும் கதாபாத்திரத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும்.

இது அஜித்குமாருக்கு நாம் சொல்லும் அறிவுரை இல்லை. ஆலோசனை.

Comments

comments