NTlrg_20170904171429119785

தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் இப்படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.

இப்படம் வருகிற சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தினங்களில் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸாவதால் வேலைக்காரனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எண்ணினர்.

ஆனால் அப்போதும் விஜய்யின் மெர்சல் வெளியாவதால் அனேக தியேட்டர் மெர்சலுக்கு தான் கிடைக்கும். இதனால் வேலைக்காரன் படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். டிசம்பர் 15 அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையான டிச., 25 தேதிகளில் படம் வெளியாகும் என தெரிகிறது.

Comments

comments