W0fkLezs625.500.560.350.160.300.053.800.900.160.90

அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு அந்தப் பாடல் பிரபலம்பெற்றுவிட்டது.

தமிழ்ச்சினிமாவில் முக்கியமான கதா நாயகர்களின் டீசர், ட்ரைலர் போன்றவற்றுக்கு நிகரான வரவேற்பை அந்த ஒரு பாடலுக்கு தமிழர்கள் முக்கியம் கொடுத்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

தாம் கேட்கும் அந்த மொழி தெரியாத பாடலை அதன் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் முக்கியத்துவம்கொடுத்துப் பார்த்தும் கேட்டுமிருக்கிறார்களெனில் அதில் ஒரு ஈர்ப்பு இல்லாமல் இல்லை.

ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் என்பது தமிழரின் பண்பாட்டோடு ஒத்துப்போகாத ஒன்று என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டிலர். கேரளாவில் உருவாக்கப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஆடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவுதூரம்வரை தூக்கிவிட்ட எண்பதுவீதமான பங்கும் தமிழர்களைத்தான் சாரும்.

சரி அந்த பாடலின் முன் இரண்டு வரிகளதும் அர்த்தம் என்னவென்று பார்ப்போம்,

”என்டம்மெட ஜிமிக்கி கம்மல்! என்டப்பன் கட்டொண்டு போயே! என்டப்பன்டெ பிராந்தி குப்பி! என்டம்மா குடிச்சு தீர்த்தே!”

அதாவது ”என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக்கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக்கொண்டு வந்தார், இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராயப்போத்தலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துட்டாள்” என்பதே அதன் அர்த்தம்.

தமிழ்ப் பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஒத்துவராத ஒரு பாடலின் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் அந்தப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோமெனில், எம்மை ஆள்வோர் காலம் காலமாக எமது முதுகில் ஏறி சவாரி செய்வதில் ஒரு ஆச்சரியமும் இல்லைத்தானே?

Comments

comments