கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசை விமர்சித்து வருகிறார். ஒவ்வொரு பிரச்சனையின் போதும் டிவிட் மூலமாகவும், நேரடியாகவும் கூறி வருகிறார். மறைமுகமாக பேசிவந்தவர் தற்போது நேரடியாகவே பேசி வருகிறார்.

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து ஜுலையில் ஒரு டிவிட் போட்டிருந்தார். இதுவரை டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பள்ளிப் படிப்பை முடிக்காதவன்
” நீட்” ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்

இந்நிலையில் நேற்று இரவு கமல் மீண்டும் இதுகுறித்து கோபமாக டிவிட் செய்துள்ளார். அரசை நம்பாமல் நம் குழந்தைகளை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் மரணத்தை தவிர்க்காத அரசு விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்

அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.

Comments

comments