vivegam_new1

விவேகம் படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது. இப்படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சென்னையில் பாகுபலி முதல் பாகம் படத்தின் வசூலை விவேகம் தாண்டியுள்ளது. 2-வது வார இறுதி நிலவரத்துக்குப் பிறகு இத்தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படம் சென்னையில் மொத்தமாக ரூ. 8.25 கோடி வசூலித்துள்ளது. அதை 2-வது வார இறுதி வசூல் நிலவரத்தின்படி தாண்டியுள்ளது விவேகம். கடந்த ஞாயிறு வரை விவேகம் சென்னையில் ரூ. 8.60 கோடி வசூலித்துள்ளது. சென்னையில் அஜித் படம் ஒன்று ரூ. 8 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது இதுவே முதல்முறை.

ஆனால், அஜித்திற்கும் கேரளாவிற்கு எப்போதுமே செட் ஆகாது போல, அஜித்தின் அதிகபட்ச வசூல் கேரளாவில் ரூ 6 கோடி தான்.

இதை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தனராம், ஆனால், படம் அங்கு ரூ 4.75 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இதனால், ஷேர் போக சுமார் ரூ. 2 கோடி வரை கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments

comments