_18494 (1)

எலியும் தவளையும் கால்களைக்கட்டிக் கொண்டு தண்ணியில் குதித்த கதை என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.

அப்படி ஒரு சம்பவம் கோடம்பாக்கத்தில் நடக்க இருப்பதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக வரும் செய்திதான் அது.

சிம்புவின் பங்ச்சுவாலிட்டி பற்றியும், தொழில் பக்தி பற்றியும் உலகமே அறியும்.

காலை 7 மணி படப்பிடிப்புக்கு வரச்சொன்னால் அடுத்த நாள் மாலை 7 மணிக்குத்தான் வருவார்.

இரண்டு நாள் தாமதமாக வந்த பிறகும் உடனே ஷாட்டுக்கு வந்துவிட மாட்டார்.

கேரவானில் புகுந்து கதவை சாத்திக் கொள்வார்.

அவர் எப்போது வெளியே வருவார் என்று யாராலும்… ஏன் அவராலும் கூட சொல்ல முடியாது.

மணிரத்னம் ஸ்டைல் வேறு.

அவர் எடுத்த படங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் 40 நாட்கள்… 45 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்.

படப்பிடிப்பை எங்கே எப்போது நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடும் மணிரத்னம், அதிலிருந்து ஒரு நாள் கூட அதிகமாக படப்பிடிப்பை நடத்த மாட்டார்.

அப்படிப்பட்ட மணிரத்னம் இயக்கத்தில் (அவரே தயாரிப்பாளர்) சிம்பு நடிக்கிறார் என்பதை கேட்கவே காமெடியாக இருக்கிறது.

‘காற்றுவெளியிடை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கும் மணிரத்னம் நடிகர், நடிகைகளின் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய ப்ராஜக்ட் பற்றி மணிரத்னம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

அதே நேரம், விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மணிரத்னத்தின் அடுத்தப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

லேட்டஸ்டாக, தன்னுடைய நட்சத்திரப்பட்டியலில் சிம்புவையும் தேர்வு செய்துள்ளார் மணிரத்னம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியானால்… மணிரத்னத்துக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

போதாக்குறைக்கு, சிம்பு நடித்து வெளியாகி படு தோல்வியடைந்த ஏஏஏ படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் மணிரத்னத்திடம் நஷ்டஈடு கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.

அதாவது சிம்புவின் சம்பளத்தை அவரிடம் கொடுக்காமல் ஏஏஏ படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும்படி வலியுறுத்தப் போகிறார்களாம்.

மணிரத்னத்தை நினைத்தால் இப்பவே பாவமாக இருக்கிறது.

Comments

comments