n9DgEzHGsuja_Liveday2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நடக்க உள்ளது. இதில் சினேகன் கோல்டன் டிக்கெட் பெற்று ஏற்கனவே இறுதி போட்டிக்குள் முதல் ஆளாக நுழைந்து விட்டார். தற்போது 5 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இதில் இறுதி போட்டியில் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். எனவே இன்று ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார். தற்போதைய நிலையில் இறுதி போட்டியில் வெல்வதற்கான பொதுமக்கள் வாக்குகளில் சினேகன் முன்னிலையில் உள்ளார்.

இது காயத்ரி, சுஜா மற்றும் காஜலுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. எனவே இவர்கள் மூவரும் சினேகனுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

காயத்ரி தற்போது ஒரு ட்விட் செய்து உள்ளார். அதில் சினேகன் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.

எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று ட்விட்டில் பதிவிட்டுள்ளார்.

இது சினேகனுக்கு ஆதரவான ட்விட் இல்லை. ஏனென்றால் காயத்ரிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை.

எனவே சினேகனுக்கு ஓட்டு கேட்டால் யாரும் போட மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த ட்விட்டே போடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு இதற்கு முன்பு சினேகனுக்கு எதிரான ட்விட்களை எல்லாம் லைக் செய்துள்ளார். அதே போல ஆரவ் வெல்ல வேண்டும் என்ற ட்விட்டுக்கு லைக் செய்துள்ளார்.

அதே போல சினேகன் பட்டம் வெல்லக் கூடாது என காஜல் மற்றும் சுஜா குறிக்கோளோடு உள்ளனர்.

காஜல் தனது ட்விட்டில் சுஜா காலில் அடிபட்ட போட்டோவை போட்டு உள்ளார். சுஜா காயம் அடைந்ததற்கு சினேகன்தான் காரணம் என்று கூறி உள்ளார்.

இதற்கு சுஜா உடனடியாக ரீட்விட் செய்து உள்ளார். இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த மூன்று பேருமே சினேகனுக்கு எதிராக களம் இறங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.

Comments

comments