சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக தமிழக அரசியல் குறித்து காரசார கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன்மூலம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

அவ்வப்போது ஊழல் ஆட்சி, முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் கமல் நேரடியாக தமிழக அரசை சாடி வருகிறார். இதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கட்சி தொடங்குவது உறுதி

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் கமல் நேர்காணல் அளித்தார். அதில் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அவர் கூறினார்.

 

சினிமாவில் நடிக்க மாட்டேன்

தான் அரசியலுக்கு வந்தப்பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். என் கட்சிக்கு மக்களே காசு தருவார்கள் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
குற்றத்திற்கு பிராய்ச்சித்தம்

25 ஆண்டுகள் தான் செய்த குற்றத்திற்கு பிராய்ச்சித்தம் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் நடிகர் கமல் அந்நிகழ்ச்சியில் கூறினார். மேலும் அரசியலில் தான் ஒரு உதயமூர்த்தியாக செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

பன்முகத்தன்மை கொண்ட நாடு

இந்து என்ற பெயரை இந்தியா மீது படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள்தான் சூட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரே இனம், ஒரே மொழி என்பதை தான் ஆதரிக்கமிட்டேன் என்றும் இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

Comments

comments