hmbcl3e8bindhu

பிக்பாஸ் வீட்டில் எல்லா இடத்திலும் கேமரா உள்ளது. கழிவறையில் மட்டும் அல்ல. அதே போல போட்டியாளர்களுக்காக ஸ்மோக்கிங் ரூமும் உள்ளது.

ஆனால் இதில் யார் சிகரெட் பிடிக்கிறார்கள் என்பதை காட்டுவதில்லை. ஆரம்பம் முதலே ஆரவ், வையாபுரி, சக்தி ஆகியோர் புகைபிடித்து வருவதாக கூறப்பட்டது.

அதே போல ரைசாவும் புகைபிடித்ததாக கூறப்பட்டது. மேலும் காயத்ரியும் கூட ஒரு புகைபிடித்தாக வதந்தி பரவியது.

அதன்பிறகு பெண் போட்டியாளர்கள் சிகரெட் பிடித்ததாக தகவல்கள் வரவில்லை. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ரோப் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த ரோப் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சுஜாவுடன் சேர்ந்து பிந்து மாதவி செய்தார். அப்போது சுஜாவும் பிந்து மாதவியும் ஸ்மோக்கிங் ரூமுக்கு செல்கின்றனர்.

அப்போது சுஜாதான் சிகரெட் பிடிக்கிறார் என்று கருதப்பட்டது. ஆனால் பிந்து மாதவிதான் சிகரெட் பிடித்துள்ளார். இதனை பார்த்து பார்வையாளர்கள் கூட அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

மேலும் உள்ளே சென்றவர்கள் ஏதோ தில்லு முல்லு செய்தனர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் விஜய் டிவியும் இதனை போட்டு காட்டியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணமாக இருக்கமுடியும். அப்போ பிந்துவிற்கு புகை பழக்கம் இருக்கா..?

Comments

comments