CxTw4HWXsarrfff

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. விமல், ஓவியா நடித்த களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

சற்குணம் இயக்கும் இந்த படத்திலும் விமல் தான் ஹீரோ. ஆனால் ஓவியா ஹீரோயின் கிடையாது.

ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். களவாணி 2 படத்தில் நடிக்க அழைத்தபோது பெரிய தொகையை கேட்டாராம். அதனால் வேறு ஹீரோயினை தேடுகிறார்கள்.

சுந்தர் சி. இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்த படத்திலும் ஓவியா கிடையாது. களவாணி 2, கலகலப்பு 2 ஆகிய படங்களில் ஓவியா இல்லை என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

களவாணி படத்தில் தலைவி அழகாக இருந்தாரேப்பா என்று வருத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவரது சம்பளத்தை ஏற்றியதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கடும் கோவத்தில் உள்ளதாக பேசப்படுகிறது.

Comments

comments