eRzUCaqnajithvijay

கோலிவுட்டில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருப்பது விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் விஜய்யும், அஜித்தும் தங்களுடைய படங்களில் மாறி, மாறி வசனங்கள் அல்லது பாடல்கள் மூலம் மோதிக்கொண்டனர். எடுத்துக்காடாக விஜய் ஒரு படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம், இதுல கீழ இருக்கவன் மேல வருவான், மேல இருக்கவன் கீழ போவன் என்று வசனம் பேசினால், தனது அடுத்த படத்தில் அஜித் எதிராக ஒரு வட்டமோ சதுரமோ இல்லை அது ஒரு நேர்கோடு எதிரில் எது வந்தாலும் ஏறி மிதிச்சிட்டு போயிகிட்டே இருக்கணும் என்பார். இப்படி பல வசன மோதல்களை நாம் பார்த்திருக்கிறோம்

இதில் அட்டகாசம் படத்தில் வரும் ‘உனக்கென்ன’ பாடம் மிகவும் பிரபலம், ஆனால், அந்த பாடலை விஜய்க்கு எதிராகவும், அஜித் சொல்லியோ வைக்கவில்லை.

ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அந்த பாடல் இருக்க வேண்டும் என்பதாலேயே அப்பாடலை வைத்தோம் என அப்படத்தின் இயக்குனர் சரண் கூறியுள்ளார்.

“ரெண்டு பேரையுமே ஏன் இத்தனை நாளா எந்த ஒரு திரைப்படத்துலயுமே பார்க்க முடியலை?”

“ இடைவெளிங்கிறது நாமே விரும்பி எடுத்துக்கிறதில்லை. சல்மான் கானை வெச்சு இந்தியில ஒரு படம் பண்ணணும்கிற முடிவுல அவர்கிட்ட கதை சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார். படம் வளர்ந்துக்கிட்டிருக்கும்போதே ஏகப்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள். அதுமட்டும் இல்லாம, தன்னுடைய குடும்ப உறவினர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதைத்தான் சல்மான் கான் விரும்புவார். பணப் பிரச்னை எனக்கு ரொம்பப் பெரிய பிரச்னையா இருந்தது. பெரிய லெவல் படங்கள் எல்லாமே எப்படியாவது நல்ல வசூலை எட்டிடும். அப்படி இல்லைன்னா, போட்ட பணத்தைத் திருப்பி எடுக்குற அளவுக்காவது படம் ஓடிடும். எங்களை மாதிரி இயக்குநர்களுக்கு வணிகரீதியிலான சிக்கல்கள் எப்போதுமே உண்டு. `படம் ஓடுமா… ஓடாதா?’ங்கிற தயக்கமும் உண்டு. ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில படம் எடுக்க முடியாமப்போயிடுறதுதான் இந்த மாதிரியான இடைவெளிகளுக்குக் காரணம்”னு சரண் சொல்லி முடிக்கும்போதே வினய் குறுக்கிட்டு, “சரண் சாருக்கு எப்படி பர்சனல் காரணம் இருந்துச்சோ, அதே மாதிரி எனக்கும் சில காரணங்கள் இருந்துச்சு. சினிமாவுல நடக்குற அரசியல்கூட, நான் இத்தனை நாளா படத்துல நடிக்காம இருந்ததுக்குக் காரணமா இருந்திருக்கலாம். இந்தப் படத்துல கமிட் ஆனப்போ சரண் சார்கிட்ட, `ஏன் வினையை நடிக்கவைக்கிறீங்க?’னு கேட்டவங்க நிறையபேர்!”

“சரி… நீங்களே சொல்லுங்க, ஏன் வினய்?”னு சரண்கிட்ட கேட்டோம்.

“இந்தப் படத்துல வர்ற முதன்மைக் கதாபாத்திரத்துக்கு ரெட்டை வேடம் கொடுக்கப்பட்டிருக்கு. பெரிய ஸ்டார் ஹீரோ யாராவது நடிச்சா, அவர்களுக்கான `முக மதிப்பு’ இருக்குமே தவிர, கேரக்டருக்கான மதிப்பு இருக்காது. என்னோட படத்துல வினய்யை எல்லாரும் கேரக்டராத்தான் பார்க்கணும்னு எதிர்பார்க்கிறேன். தவிர, இவர் பெரிய ஸ்டாரா மாறுவதுக்கு முன்னாடியே இந்த மாதிரியான ரோல்ல நடிச்சா, எதிர்காலமும் நல்லா இருக்கும். தியேட்டருக்கு வர்ற மக்கள் ஹீரோ மேல எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம படத்தைப் பார்த்தாங்கன்னா கேரக்டர் மட்டும்தான் மனசுல தாங்கும். இந்த ஒரு ஃபார்முலாக்குள்ளேதான் படத்தோட வெற்றியே அடங்கியிருக்கு.”

“சல்மான் கானை வச்சு பண்ண படம் வெளிவருமா?”

“அதுக்கு அப்புறம் எந்த ஒரு முடிவும் எடுக்கலை. அது சம்பந்தப்பட்ட ஆள்கள் எல்லோர்கிட்டயும் கலந்து ஆலோசிச்சுத்தான் பதில் சொல்ல முடியும். என் படங்கள்ல எனக்கு திருப்தியான திரைப்படம், மக்களிடம் அதிகம் பேசப்படும் திரைப்படம் `வட்டாரம்’. இந்தப் படத்தை மட்டும் எப்பாடுபட்டாவது இந்தியில் எடுத்துறணும்கிற ஆசை இருக்கு. அதுல அமிதாப் பச்சனை நடிக்கவைக்கணும்னு திட்டம் போட்டிருக்கேன்.”

“உங்களோட நிறைய படங்கள் ரீமேக் பண்ணப்படுதே. அதைப் பற்றி உங்க கருத்து என்ன?”

“தமிழ்ல முதன்மை இயக்குநர்களா இருக்கிற பாலசந்தர் சார், மணிரத்னம் சாருடைய படங்களை வேற யாராலயுமே ரீமேக் பண்ண முடியாது. இந்த லிஸ்ட்ல நான், என்னையும் இணைச்சுக்கணும்னு பார்க்கிறேன். ஒரு படத்தை ரீமேக் பண்றது, அந்த இயக்குநர்கிட்ட இருந்து ஸ்க்ரிப்ட்டைத் திருடி படம் இயக்குறதுக்குச் சமானம். இந்த ஒரு காரணத்துலதான் முக்கால்வாசி ரீமேக் படங்கள் சரியா ஓடுறதில்லை.”

“அஜித்துக்கு ஸ்க்ரிப்ட் ஏதும் இருக்கா?”

“என்கிட்ட ஸ்க்ரிப்ட்டுக்குப் பஞ்சமே இல்லை. அஜித் சமீபகாலமா படத்துல நடிக்கிறதுக்கு நிறைய தடைகள் இருக்கு. தன்னைத்தானே ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிட்டார். அவர் ஒத்துழைச்சாருன்னா, என் அடுத்த பட ஹீரோ அவர்தான்.”

“அஜித் அப்போ பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறதுக்கும் எப்படி இருக்கார்?”

“எனக்கும் அஜித்துக்குமான நட்பு, கிட்டத்தட்ட 19 வருஷங்களா இருக்கு. தோற்றத்துல மட்டும்தான் வித்தியாசமே தவிர, அவருடைய கேரக்ட்டர்ல ஒரு சின்ன வித்தியாசம்கூட இல்லை. அப்போ எப்படி என்கிட்ட பழகினாரோ, அதே அன்போடுதான் இப்பவும். என்கிட்ட மட்டுமில்ல, எல்லார்கிட்டயும் அவர் இப்படித்தான் நடந்துக்கிறார். அஜித் எவ்வளவு உயரத்தைத் தொட்டாலும், அடிப்படையில் அவர்கிட்ட இருக்கிற மாதிரியான பணிவு கலந்த அன்பை, சினிமாவுல வேற யார்கிட்டயும் பார்க்க முடியாது.”

“உங்களுடைய படங்களைப் பார்த்துட்டு, பாலசந்தர் என்ன சொன்னார்?”

“உதவி இயக்குநரா இருந்தப்போ, நிறைய திட்டுவாங்கியிருக்கேன். என்னுடைய முதல் படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். ` `காதல் மன்னன்’ படத்தை மூணுவிதமா சொல்லலாம். நீ வணிகரீதியா சொல்லிருக்க. ஆல் தி பெஸ்ட்’னு சொன்னார். `இதயத் திருடன்’ படத்துல வர்ற ஒருசில காட்சிகளைப் பார்த்துட்டு, `இதை நீ எப்படி எடுத்த?’னு ஆச்சர்யப்பட்டார். நம்ம யார்கிட்ட இருந்து தொழில் கத்துக்கிட்டோமோ அவங்களே நம்ம திறமையைப் பார்த்து வியப்பதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கப்போகுது சொல்லுங்க!”

“கமல்ஹாசனை வெச்சு படம் எடுக்கிறதுனாலே அவருக்காக ஸ்க்ரிப்ட்ல சில மாற்றங்களைக் கொண்டுவரணும்னு பரவலா ஒரு கருத்து இருக்கே…”

“கமல் சாரை பற்றி வெளியே இப்படித்தான் பலரும் பலவிதமா பரப்பிட்டு வர்றாங்க. அவர் இயக்குநருக்கு அதிக மதிப்பு கொடுத்து, ஸ்க்ரிப்டுக்கு ஏற்ற மாதிரி நடிப்பை வெளிப்படுத்துவார். நான் `வசூல்ராஜா MBBS’ படத்துக்காக அவர்கிட்ட பேசும்போது ரொம்பவே தயங்கினார். ரீமேக் படத்துல நடிக்கிறதுல அவருக்கு விருப்பமே இல்லை. அவர் ஒருமனசா இந்தப் படத்துக்கு சம்மதிச்சதுனால, செட்டுக்கு வரும்போதே ரொம்ப அசால்ட்டாகத்தான் வருவார். படம் எடுக்கிறதுக்காக எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 45 நாள்தான். அதுக்குள்ள ஷூட்டிங் முடிச்சாகணும். அவர் சரியா ஒத்துழைக்கலைன்னா இவ்வளவு குறைவான நேரத்துல படத்தை முடிச்சிருக்க முடியுமா?”

“ `ஆயிரத்தில் இருவர் படத்துல காஜல் சுருட்டு பிடிக்கிற மாதிரியான காட்சி இருக்கே…”

“ஆமா. சினிமாவுல வில்லன்களுக்கு கெட்டபழக்கம் இருக்கிற மாதிரி காட்டுவோம். அது அப்படியே மக்கள் மனசுல பதியும். இந்தப் படத்துலயும் கெட்டபழக்கம் இருக்கிற பெண்மணியை இந்த மாதிரி சித்திரிக்க விரும்புறேன். நம்ம சமூகத்துலயும் குடிக்கிறவன், சிகரெட் பிடிக்கிறவன் எல்லாருக்கும் `கெட்டவன்’னு ஒரு எண்ணம் இருக்குதுல.”

வினய்

“முதல் படத்துல மாஸ் ஹிட் கொடுத்துட்டு, காணாமப்போயிட்டீங்களே…”

“எல்லாருக்குமே நேரம் காலம் கைகொடுக்காது. நான் அறிமுகமாகும்போதே என்னை எல்லாரும் ஒரு ரொமான்டிக் லவ்வர் பாயாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. வேற வித்தியாசமான கதைகள் எதுவும் எனக்குக் கிடைக்கலை. இப்போதான் என்னோட சினிமா வாழ்க்கையில திறமையை வெளிக்காட்டுறதுக்கான நேரம் வந்திருக்கு. `துப்பறிவாளன்’, `ஆயிரத்தில் இருவர்’ படம் மூலமா என்னோட வாழ்க்கையே மாறும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. `ஆயிரத்தில் இருவர்’ படத்துல ஹீரோ, வில்லன் ரெண்டுமே நான்தான்!”

“எப்போ கல்யாணம்?”

“என்னோட வீட்டுலயும் கல்யாணம் பண்ணுனு சொல்லிக்கிட்டே இருக்காங்க. இப்பதான் என்னோட தம்பிக்குக் கல்யாணமாச்சு. எனக்கு, கல்யாணம்கிற எண்ணமே இல்லை. இப்போதைக்கு எந்தப் பொண்ணும் என் வாழ்க்கையில இல்லை. இப்போதான் சினிமா வாழ்க்கையில என்னோட செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கு. ரிலேஷன்ஷிப்புக்குக்கூட இப்போதைக்கு `நோ’தான்.”

“எதிர்காலத் திட்டம் என்ன?”

“ஆக்ஷன் படத்துல நடிக்கணும். இப்போ `நேத்ரா’னு ஒரு படத்துல கமிட்டாகியிருக்கேன். சென்னையிலயும் கனடாவுலயும் மாறி மாறி ஷூட்டிங் போயிட்டிருக்கு. நல்ல ஸ்க்ரிப்ட் எதுவா இருந்தாலும் நடிக்க நான் தயார்” என்றார் வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கும் வினய்.

Comments

comments