manohar-parikkar

பானாஜி : கோவாவின் பனாஜியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசி முதல்வர் மனோகர் பாரிக்கர், கோவாவில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்க விதிக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : கோவாவில் பொது இடங்களில் மது குடிப்பவர்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே மது குடிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே குடித்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் குடிக்க கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. விரைவில் பொது இடங்களில் மது குடிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 15 நாட்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

மதுக்கடை அருகில் மக்கள் குடிப்பது கண்டறியப்பட்டால் மதுக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோரங்களில் மது குடிப்பவர்கள், மது குடித்த பின்னர் பாட்டில்களை சாலையில் உடைத்துப் போட்டு விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சிரமங்களை களைவதால் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படும் என்றார்.

Comments

comments