CKxiMl6UwAAaxcP

அழகே நிரம்பிய நயன்தாரா, கோபப்பட்டால் மட்டும் ‘கோப்ரா’ ஆகிவிடுவார். இந்த உண்மை புரியாமல் அவரை சீண்டினால் விஷக்கடி நிச்சயம். அதற்கு ரீசன்ட் உதாரணம் அவரது மேனேஜர் ராஜேஷ்தான்! கடந்த சில தினங்களுக்கு முன், படு கொடூரமாக அவர் விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்! ஏன்? ஏன்? ஏன்?

அதை சொல்வதற்கு முன் ராஜேஷ் பற்றிய ஒரு சிறு குறிப்பு. பிரபுதேவாவின் மேனேஜராக இப்பவும் இருக்கிறார் இவர். மாஸ்டரின் ரெகமன்டேஷன் பேரில் நயன்தாராவுக்கும் தேதிகளை கவனித்து வந்தார். மாஸ்டர்- நயன் பிரிவுக்கு பின்பும் இந்த வேலையை அவரிடமிருந்து பிடுங்காததன் காரணம், நம்பிக்கையான மனுஷன் என்பதால்தான். அந்த நம்பிக்கை இன்னும் வலுத்து, அறம் என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் அவரை மாற்றியிருந்தது.

இந்த நல்ல நேரத்தில்தான், அந்த பொல்லாத கருப்பு நாய் குறுக்கே வந்தது. அந்த கருப்பு நாயின் பெயர் சந்தேகம். ராஜேஷ் நம்மகிட்டயிருந்து துட்டை அடிக்கிறாரோ என்கிற டவுட் வர… கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தாராம். என்ன பாயின்ட் கிடைத்ததோ? பல வருஷங்களாக தன்னிடமிருந்த ராஜேஷ், பல லட்சங்கள் ஏமாற்றிவிட்டதாக ஃபீல் பண்ணியிருக்கிறார்.

கோப்ராவின் சீறலில் சப்த நாடியும் அடங்கிப் போய் நின்றாராம் மேனேஜர். இனிமே என் முகத்திலேயே முழிக்கக் கூடாது. ஓடிப்போயிடு என்று விரட்டியடித்திருக்கிறார் நயன்.

கொடுமை என்னவென்றால், நயன்தாராவின் பணத்தில் உருவான அறம் படத்தின் பினாமி தயாரிப்பாளரே இந்த ராஜேஷ்தான். அவரது துணையில்லாமல் எப்படி படம் வெளியே வரும்?

அதுக்கெல்லாம் வழி வைக்காமலா விரட்டியிருப்பார் கோப்ரா?

Comments

comments