OBIDx85Csandhanam-660x330

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்த படம் தில்லுக்குத் துட்டு. கடந்த ஆண்டு ஜூலையில் இந்த படம் வெளியானது. அதையடுத்து சர்வர்சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கனும் என பல படங்களில் கமிட்டாகி நடித்தார் சந்தானம். ஆனபோதும் தில்லுக்குத்துட்டு படத்திற்கு பிறகு ஓராண்டு முடிந்து விட்ட போதும் இன்னும் அதற்கடுத்த படத்தை அவரால் வெளியிட முடியவிலலை.

மேலும், சர்வர்சுந்தரம் படத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நினைத்தார். ஆனால் அஜீத்தின் விவேகம் வெளியாகயிருந்ததால் ஆகஸ்ட் கடைசி வாரத்திற்கு ரிலீஸ் தேதியை மாற்றினார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் விவேகம் ஆகஸ்ட் 24ந்தேதிக்கு மாறியதால், இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிடுகிறார். அதையடுத்து இரண்டே மாதங்களில் சக்க போடு போடு ராஜா படத்தை வெளியிடுகிறாராம்.

மேலும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குத்துட்டு என மூன்று படங்களில் நாயகனாக நடித்து விட்ட சந்தானம், இந்த சர்வர்சுந்தரம் படத்தில் காமெடி ஹீரோ என்பதில் இருந்து விடுபட்டு ஆக்சன் கலந்த எமோசனல் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

Comments

comments