JdezySmF58

இயக்கியவர் சிறுத்தை சிவா. விவேகம் படத்தில் நடித்த போது தனது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார் அஜித். அதனால், அஜித் நடிக்கும் அடுத்த படம் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு, அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு உள்பட சில டைரக்டர்களின் பெயர்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி மீண்டும் அஜித்தை, சிறுத்தை சிவாவே இயக்குவார் என்று கூறப்படுகிறது. கதையைக்கேட்டு அஜித்தும் ஓகே பண்ணி விட்டாராம். அதனால் ஸ்கிரிப்ட் வேலைகளில் சிவா ஈடுபட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

Comments

comments