Anita-1-(

அரியலுார் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மூட்டைத்துாக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. படிப்பில் படுசுட்டி.

குழுமூர் எனும் அந்த பேருந்தை பார்க்காத கிராமத்தில் அனிதாவின் வீடு ஒரு ஓட்டு வீடு. அங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளியில்தான் உயர்நிலைக் கல்வி பயின்றார். மகள் மருத்துவராவேன் என அடிக்கடி சொல்லிவந்ததை ஆரம்பத்தில் உளறளாகப் பார்த்தார் அந்த ஏழைத்தந்தை.

ஆனால் 10 ம் வகுப்பில் 478 மதிப்பெண் பெற்றதோடு இரு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தது, அனிதாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்த தந்தைக்கு. மகள் மருத்துவராவார் என அவர் பெரிதும் நம்பினார்.

மழைநாளில் ஒழுகும் வெயில் நாட்களில் சூரியனின் வெளிச்சம் விழும் கழிவறை கூட இல்லாத அந்த ஓட்டு வீட்டிலிருந்துதான் தன் மருத்துவக்கனவை மனதில் வளர்த்தெடுத்தார் அனிதா. மற்ற மாணவிகள் போல் அல்லாமல் எந்நேரமும் புத்தகமும் கையுமாகவே திரிந்தார்.

 

அதன்பலனாக கடந்த வருடம் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அவர். இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண் என, ப்ளஸ் டூ-வில் அவர் பெற்ற மதிப்பெண்ணால் ஊரே பெருமை கொண்டது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (15)

தங்கள் ஊர்ப்பெண் மருத்துவராக மருத்துவமனை செல்வார் என நம்பியிருந்தது குழுமூர் கிராமம். ஆனால் இன்று அவரது உடல்தான் துரதிர்ஸ்டவசமாக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்றிருக்கிறது.

அனிதாவின் மருத்துவக்கனவை சிதைத்து அவரை கொன்று பழிதீர்த்தது நீட் நுழைவுத்தேர்வு. வழக்கம்போல் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், அனிதா பெற்ற மதிப்பெண்ணுக்கு தலைநகரிலேயே மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கும்.

அவரின் கட் ஆஃப் மதிப்பெண் 196.5. ஆனால் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 86. இதனால் அவரது மருத்துவக்கனவு நனவாகிற வாய்ப்பை இழந்தார். மருத்துவம் கிடைக்காததால் கலந்தாய்வில் கடந்த வாரம் கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

ஆனால் மருத்துவம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த அனிதா இதனால் மனம் உடைந்து காணப்பட்டதாக சொல்கிறார்கள்.

அம்மா இறந்து பல வருடங்களாகிவிட்டன. அப்பா கூலித்தொழிலாளி. இந்த குடும்ப சூழலிலும் வறுமையின் இடையிலும் துவளாமல் தன் மருத்துவக்கனவை நனவாக்கப் போராடிப் படித்த அந்த அனிதா மருத்துவம் கிடைக்காததால் வேதனையும் விரக்தியுமாக இன்று தற்கொலை முடிவெடுத்திருக்கிறார்.

Comments

comments