R2CdvkhQ557111_619985931357708_1347407948_n

விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் படங்களுக்கு தென்னிந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஆனால், தெலுங்கில் விஜய்க்கு தற்போது வரை பெரியளவில் மார்க்கெட் இல்லை, அதற்காக விஜய் புலி, தெறி என பல படங்களில் ரிஸ்க் எடுத்து அதிக திரையரங்குகளில் அந்தப்பகுதியில் ரிலிஸ் செய்தார்.

அந்த படங்களும் அவருக்கு பெரிதும் கைக்கொடுக்கவில்லை, இந்நிலையில் இயக்குனர் முருகதாஸிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஏன் துப்பாக்கி படத்தை மகேஷ் பாபுவை வைத்து எடுக்கவில்லை என்று கேட்டனர்.

அதற்கு முருகதாஸ் ‘நான் எடுக்க ரெடியாக தான் இருந்தேன், ஆனால், விஜய் சாருக்கு தெலுங்கில் பெரியளவில் மார்க்கெட் இல்லை. அவர் தான் தெலுங்கில் இப்படத்தை டப் செய்து வெளியிட்டால் எனக்கு நல்ல மார்க்கெட் உருவாகும் என்று கேட்டார். அதனால் தான் துப்பாக்கி படத்தை விஜயை வைத்து எடுத்தேன் எனவும், தெலுங்கில் டப் செய்து வெளியிட்டதால் தெலுங்கிலும் விஜய்க்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Comments

comments