“படம் ஆரம்பிக்கும்போது ‘சீனி’னுதான் பெயர் வெச்சிருந்தோம். இப்பவும் படத்துக்கு ‘சீனி’தான் பெயர். ஆனா, படத்தின் பப்ளிசிட்டிக்காக `ஓவியாவ விட்டா யாரு?’ மட்டும் தலைப்புக்கு முன்னாடி தயாரிப்பாளர் சேர்த்திருக்கார். ட்ரெய்லர் வெளியிட்டிருந்தோம், நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது” என ஆர்வமாகப் பேசுகிறார் ‘ஓவியாவ விட்டா யாரு?’ படத்தின் இயக்குநர் ராஜதுரை.

thumb-ak-660x400_17130

“படத்துல வரும் ஓவியா கேரக்டர் பற்றி…”

“ஓவியா, படத்துல ஒரு பத்திரிகையாளர். செம கெத்தா இருப்பாங்க. எதுக்கும் பயப்பட மாட்டாங்க. ஆரம்பத்துல இருந்து க்ளைமாக்ஸ் முழுக்கவே ஓவியா ராஜ்ஜியம்தான்.”

“படத்தோட ஒன்லைன் என்ன?”

“எம்.பி.ஏ படிச்ச ஒரு பையன், கவர்மென்ட் வேலைக்கே போகாம பிசினஸ் பண்ணி கோடீஸ்வரன் ஆகணும்னு நினைக்கிறான். இதுக்கு, பத்திரிகையாளரா இருக்கும் ஹீரோயின் எப்படி ஹெல்ப் பண்றாங்க… அவர் கோடீஸ்வரர் ஆனாரா என்பதுதான் கதை. செம காமெடியா சொல்லியிருக்கோம்.”

“ஷூட்டிங் ஸ்பாட்ல ஓவியா எப்படி?”

dir_17051“கடினமான உழைப்பாளி. `பிக் பாஸ்’ வீட்டுல எப்படி இருந்தாங்களோ, அப்படியேதான் இருப்பாங்க. எதுக்குமே கோபப்பட மாட்டாங்க. அவங்களுக்குப் புரியலைன்னா  உடனே வந்து கேட்டுடுவாங்க. புரியாம, நான் சொல்றேனேன்னு நடிக்க மாட்டாங்க. இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். சுராஜ் சார்கிட்ட ‘தலைநகரம்’, ‘மருதமலை’, `படிக்காதவன்’, `மாப்பிள்ளை’, `அலெக்ஸ்பாண்டியன்’ வரைக்கும் நான்தான் அவருக்கு கோ டைரக்டர். இந்த அஞ்சு படங்களும் பெரிய படம் என்பதால், எல்லா ஆர்டிஸ்ட்டுகளுமே எனக்குத் தெரிஞ்சவங்க. ‘படிக்காதவன்’ படம் மூலமா  தமன்னாவும் ‘மாப்பிள்ளை’ படம் மூலமா ஹன்சிகாவும் சூப்பர் ஹீரோயின்ஸ் ஆன மாதிரி, ஓவியாவும் பெரிய அளவுல வருவாங்க.”

 

“ ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள இருந்த ஓவியா வெளியே வந்ததும் உங்ககிட்ட பேசினாங்களா?”

“ம்ம்… இப்பவும் பேசிட்டுத்தான் இருக்காங்க. ‘இந்தப் படத்துல நான் நல்லா நடிச்சிருக்கேன். நல்லா காமெடியும் பண்ணியிருக்கேன். ஆனா, ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போனதால அப்செட்ல இருந்தேன். இப்ப ரிலீஸ் ஆகப்போறதை நினைச்சா சந்தோஷமா இருக்கு. உங்க உழைப்பும் வீண்போகலை; என் உழைப்பும் வீண்போகலை’னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க. பத்து படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தால் ஒரு நடிகை எப்படி பூஸ்ட் ஆவாங்களோ, அப்படி ஒரு உற்சாகத்தை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஓவியா அடைஞ்சிருக்காங்க. யூத் முழுக்க இப்ப அந்தப் பொண்ணு கையிலதான் இருக்காங்க.”

“ஓவியா தவிர வேற யாரெல்லாம் இந்தப் படத்துல இருக்காங்க?”

“இந்தப் படத்துல நடிகர் நடிகைங்க மட்டுமல்ல, தொழிநுட்பக் கலைஞர்கள் எல்லாருமே பிரபலமானவங்கதான். ராதாரவி, செந்தில், ரவி மரியான், தாஸ், வையாபுரி, கஞ்சா கருப்பு, டி.பி.கஜேந்திரன், ‘பருத்தி வீரன்’ சரவணன்… எல்லாருமே பெரிய நடிகர்கள். ஹீரோ புதுமுகமா இருந்தாலும் நடிப்புல பின்னியிருக்கார். காமெடியில அத்தனை நடிகர்களுமே கலக்கியிருக்காங்க.”

Oviyavai-Vitta-Yaru-12_17506

“படம் எப்போ ரிலீஸ்?”

“2015 மார்ச்ல ஆபீஸ் போட்டோம். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கி நவம்பர்லயே மொத்தப் படத்தையும் முடிச்சுட்டோம். டிசம்பர்லயே சென்சார் போர்டுல படத்தை காமிச்சு ‘யு’ சர்ட்டிஃபிகேட்டும் வாங்கியாச்சு. பொருளாதார ரீதியிலயும் விநியோகத் தொடர்புகள்ல ஏற்பட்ட சில பின்னடைவும்தான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாததுக்குக் காரணம். இப்ப அதெல்லாம் முடிஞ்சிடுச்சு. அடுத்த மாசத்துக்குள்ள ரிலீஸ் செஞ்சுடுவாங்கனு நினைக்கிறேன். விதி எப்படி விளையாடுன்னு பாருங்க. ‘பிக் பாஸ்’ ஆரம்பிக்கும்போது ஓவியா, வையாபுரி, கஞ்சா கருப்பு, சினேகன்னு இந்தப்  படத்துல வேலை செஞ்ச நாலு பேரு உள்ளே போறாங்க. இந்தப் படத்துல முக்கியமான நாலு ஆளுங்களும் அங்கே இருந்திருக்காங்க. இது எனக்கே தெரியாது. லைஃப்ல சர்பரைஸ் எப்படி வேணாலும் நடக்கலாம்னு சொல்வாங்க. எனக்கும் என் டீமுக்கும் அது ‘பிக் பாஸ்’ மூலமா கிடைச்சிருக்கு.”

Comments

comments