‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே என்று டிக் பண்ணுகிற அளவுக்கு டாப்புக்கு போய்விட்டார் அவர்.

களவாணிதான் ஓவியா நடித்து தமிழில் வந்த முதல் படம். இப்போது அந்தப்படத்தின் பார்ட் 2 வை எடுத்து கல்லா கட்டலாமா என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சற்குணம். விமல் சும்மாதான் இருக்கார். எப்ப கூப்பிட்டாலும் வருவார். ஆனால், ஓவியா வரணுமே? ஏராளமான எதிர்பார்ப்புடன் ஓவியாவை நாடினால், ஸாரி சார். நடிக்க விரும்பல என்று கட் பண்ணிவிட்டாராம்.

oviya

ஆனால், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் காட்டேரி என்ற படத்தில் புதுமுகத்துடன் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தை டீகே இயக்குகிறார். அறிமுகப்படுத்தியவருக்கு அம்போ… நடுவுல வந்தவருக்கு தங்க சொம்போ? என்று நடுநிலை பஞ்சாயத்தார்கள் கேள்வி எழுப்பினால், ஓவியாவின் ஆர்மி உள்ளே வந்து சவட்டி களிக்குமோ? மற்றும் ஓவியா இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தில் நடிக்கவுள்ளார்.

ஓவியா biggboss ல் ஒரு தூண் போல் இருந்தார் என்றே சொல்லலாம்,விஜய் தொலைகாட்சி நடத்தும் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் biggboss இதில் ஓவியாவும் கலந்து கொண்டார்,இந்நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ ஓவியா கலந்து கொண்டது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்,

biggboss வீட்டில் ஓவியாவிற்கு காதல் மலர்ந்த்தது எவ்ளோ சீக்கிரம் வளர்ந்த்ததோ காதல் அதே விரைவில் முறிந்து விட்டது.ஓவியா சில தவிர்க்க முடியாத காரணத்தால்  biggboss வீட்டை விட்டு வெளியே சென்றார். ஓவியாவிற்கு வெளியே வந்தததும் ரசிகர்கள் அன்பை  பெற்றார் பின்பு முழு மூச்சாக படத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

இனி biggboss போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ‘ஹரஹர மகாதேவா’ படத்தின் இசை வெளியீடு  நடந்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த தலைப்பு பிரபல நடிகை ஓவியா நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது இது ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

Comments

comments