சிவாஜி – பிரபு, பிரபு – விக்ரம் பிரபு, சத்யராஜ் – சிபி ராஜ், கார்த்தி – கெளதம் கார்த்தி என பல அப்பா மகன் மற்றும் நடிகைகளின் மகள்கள் உறவு முறையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் நபர்களை தான் நாம் பார்த்திருப்போம். அறிந்திருப்போம்.

ஆனால், பெற்றோர் – பிள்ளை உறவு இல்லாமல் வேறு சில உறவு முறை கொண்டுள்ள தமிழ் திரை பிரபலங்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்…

ஏ.ஆர். ரஹ்மான் – ஜி.வி. பிரகாஷ்!

ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த அக்கா ரெய்ஹனா மற்றும் ஜி. வெங்கடேஷ் எனும் பின்னணி பாடகரின் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். இந்த வகையில் பார்த்தல் ஜி.வி பிரகாஷ் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடன் பிறந்தாரின் மகன் ஆகிறார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (21)

ஸ்ரீசாந்த் – பாடகர் மது பாலகிருஷ்ணன்!

மலையாள பாடகர் மது பாலகிருஷ்ணன்-க்கு ஸ்ரீசாந்த் மைத்துனன் / கொழுந்தன் முறை ஆகிறார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (22)

ரஹ்மான் – ரகுமான்!

சங்கமம் புகழ் நடிகர் ரகுமானுக்கு இசை புயல் ரஹ்மான் மைத்துனன் / கொழுந்தன் ஆவார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (23)

பிரியாமணி – வித்யா பாலன்!

பிரியாமணி – வித்யா பாலன் உறவும் இரண்டாவது சந்ததி மாமன் மகள் / அத்தை மகள் உறவு முறை கொண்டவர்கள். இருவரின் அப்பாக்களும் மாமா பையன், அத்தை பையன் உறவு முறை.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (24)

கமல் – மணிரத்னம்!

கமலின் சகோதரனின் மகளான சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (25)

சோ – ரம்யா கிருஷ்ணன்!

மறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை ஆகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (26)

சத்யராஜ் – சத்யன்!

சத்யராஜ்-க்கு மருமகன் முறை உறவுக்காரர் சத்யன்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (27)

பிரகதி – அபினவ் முகந்!

பாடகி பிரகதி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் இவர்கள் இருவரும் அத்தை, மாமா; பெரியப்பா, பெரியம்மா மகன், மகள் உறவுமுறை கொண்டவர்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (28)

ஞானவேல் ராஜா – நடிகர் சிவா குமார்!

நடிகர் சிவகுமாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மருமகன் உறவு முறை ஆகிறார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (29)

ஒய். ஜி. மகேந்திரன் – ரஜினிகாந்த்!

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரன் சகலை உறவு முறை ஆகிறார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (30)

Comments

comments