சினிமாவில் நடிக்க வருவதே குடிக்கவும், குட்டிகளுடன் கூத்தடிக்கவும்தான் என்பதுபோல் கோடம்பாக்கத்தில் பெருங்கூட்டமே அலைகிறது.

இவர்களின் வேலையே சரக்கடிப்பதும்…. பெண்களுடன் சல்லாபிப்பதும்தான்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்களான இயக்குநர் வெங்கட்பிரபு, அவரது தம்பி பிரேம்ஜி, இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் நடிகர் ஜெய், தெலுங்கு நடிகர் வைபவ், வசந்த் அண்ட் கோ வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் உட்பட ஒரு குரூப்புக்கு தினமும் இதுதான் வேலையே..

ராத்திரியானால் பார்ட்டி என்ற பெயரில் சரக்கடிப்பதற்காக கூடுகிற இவர்கள் விடியவிடிய குடிக்கிறார்கள்…. கூத்தடிக்கிறார்கள்.

இதை அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று ஒதுக்கிவிடலாம்தான். ஆனால் அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சி எப்போது மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறுகிறதோ, அப்போதே அது விமர்சனத்துக்குரியதாகிவிடுகிறது.

இந்த குடிகாரக்கூட்டத்தின் செயல்களும் அப்படித்தான்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மதுவின் தீமையை உணர்ந்து பல தரப்பினரும் டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னெழுச்சியாய் இப்படிப்பட்ட போராட்டங்கள் தமிழகமெங்கும் வீரியமடைந்துவரும் வேளையில், இன்னொரு பக்கம் இளையராஜா வீட்டு இழிபிறவிகளான வெங்கட்பிரபு, பிரேம்ஜி பிரதர்ஸ் சரக்கடிப்பதை ‘பார்ட்டி பண்ணுகிறோம்’ என்ற பெயரில் பொதுவெளியில் புனிதப்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் சரக்கடிக்க இருப்பதை ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

pre-530x700

இதை பொதுவெளிக்குக் கொண்டு வருவதன் மூலம் சரக்கடிப்பதை சர்பத் குடிப்பது போன்றதொரு சாதாரண விஷயமே என்பதுபோல் மக்களின் மண்டையில் கருத்துத் திணிப்பை செய்கிறது இந்த கயவாளிக்கூட்டம்.

உச்சகட்டமாக, தான் இயக்கும் படத்துக்கு பார்ட்டி என்று தலைப்பு வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இவர்கள் தங்களுடைய வீட்டில் குடித்துவிட்டு, அங்கேயே வாந்தி எடுப்பதால் யாருக்கும் பிரச்சனையில்லை.

அது பற்றி நாம் கேள்விகேட்கவும் மாட்டோம்.

குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்துவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

இந்த குடிகார கும்பலைச் சேர்ந்த நடிகர் ஜெய், சில வருடங்களுக்கு முன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்து காசி தியேட்டர் அருகில் உள்ள பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

அபராதம் கட்டிய பிறகு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்.

நேற்றைய முன்தினம் இரவு, வழக்கம்போல் கண்முன் தெரியாமல் குடித்துவிட்டு, சக குடிகாரனான பிரேம்ஜி உடன் ‘ஆடி’ காரில் தன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற ஜெய், காரை அதிவேகமாக ஓட்டியிருக்கிறார்.

ஜெய் ஓட்டி வந்த கார், அடையாறு மலர் மருத்துவமனை அருகே சென்றபோது தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.

கார் மோதியது கூட தெரியாமல் குடிபோதையில் நடிகர் ஜெய்யும், பிரேம்ஜியும் காருக்குள்ளேயே சொரணையில்லாமல் மயக்கத்தில் கிடந்துள்ளனர்.

அதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யையும், பிரேம்ஜியையும் தட்டி எழுப்பி அடையாறு சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

போதை தெளிந்த பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போக்குவரத்து போலீசார், நடிகர் ஜெய் மீது மட்டும் குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

அதோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த போக்குவரத்து போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அடையாறு போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தினமும் குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் காரை ஓட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் ஜெய், சல்மான்கானைப்போல் அப்பாவிகளை சாவடிப்பதற்குள் காவல்துறை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

– ஜெ.பிஸ்மி

jai-523x700

Comments

comments