LUhVr50panitha-lawrence-660x330

லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பல உதவிகளை இவர் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா என்ற மாணவி இறந்தார்.

தமிழக அரசு அறிவித்த 7 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். எதிர்க்கட்சி திமுக ரூபாய் 10 லட்சம் கட்சி சார்பில் வழங்கியது.

ஆனால், அனிதாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ 15 லட்சம் அவருடைய குடும்பத்திற்கு கொடுத்துள்ளார்.

Comments

comments