kQV5V8Egasdfasffsafa (1)

தெறி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் 3 வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’ தீபாவளியன்று திரைக்குவரவுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு இருப்பதை சொல்லி அறிய வேண்டியது இல்லை.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு சான்றாக சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீஸர் பல சாதனைகளை புரிந்து வருகிறது. உலகிலேயே அதிக லைக் பெற்ற டீஸர் என்கிற பெருமையினை பெற்ற இத்திரைப்படத்தின் டீஸர், தற்போது 195k டிஸ்லைக் பெற்று, இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற டீஸர் என்கிற பெயரினையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வந்த DJ படத்தின் டீஸர் தான் 186k டிஸ்லைக் பெற்று முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. இணையத்தில் இந்த டீஸரை இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. விஜய்-அஜீத் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளால் அஜீத் ரசிகர்களே அதிக டிஸ்லைக் கொடுத்து வருவதாக விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Comments

comments