FpzWein2maxresdefault-(2)

அஜீத் உடன் மீண்டும் சரித்திர படத்தில் இணைகிறார் சிவா!வீரம்,வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து விவேகம் படத்தை உருவாக்கினார் சிவா.

இந்த படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் படத்தை சிவாதான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் சிவா நிறைய கதைகள் கூறியிருக்கிறார்.

அஜித்துக்கு ஏற்றக் கதையைத் அவர் தேர்வு செய்தவுடன் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனேகமாக சரித்திரப் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சிலையை ஏற்படுத்தி உள்ளது.

Comments

comments