[

தான் வாழும் கலைத்துறையில் ஒரு செங்கல்லை எடுத்து வைக்கக் கூட முன் வருவதில்லை அஜீத். நடிகர் சங்கம் எலக்ஷனா? ஓட்டுப்போட வர மாட்டார். அவரே நடித்து வெளிவரும் படமா? புரமோஷன், பிரஸ்மீட், பேட்டி, எதற்கும் வர மாட்டார். சினிமாவுலகமே மதிக்கும் யாராவது இறந்துவிட்டார்களா? ஒரு அறிக்கை கூட வராது அவர் பெயரில். சக சினிமாக்காரர்கள் வீட்டுப்பக்கம் வருகிறார்களா? வாசலில் இருக்கிற வட மாநில கூர்க்காக்கள் இந்தியிலே பேசி விரட்டுவார்கள்.

ரசிகர்களா? “மன்றத்தை எப்பவோ கலைச்சாச்சேப்பா…! போன வாரம் கூட விவேகம் ரிலீசுக்கு முன்னாடி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேனே. கவனிச்சீங்களா?” என்பார் போலிருக்கிறது. இப்படி தனக்கு முன்னால் பின்னால் வருகிறவர்களை மட்டுமல்ல, எவரையும் துச்சமென மதிக்கும் அஜீத், கடைசியாக செய்த இன்சல்ட் விஷாலுக்கு!

தனது தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்காக நேரில் சென்று அழைப்பு வைத்தாராம் விஷால். உலகமே மதிக்கக் கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினி, வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திவிட்டது. ஆனால் அஜீத்? அந்த திசையில் எட்டிக்கூட பார்க்கவில்லை. அவருக்குதான் சவுன்ட் அலர்ஜி. கூட்ட அலர்ஜி. ஆனால் தன் மனைவி குழந்தைகளை அனுப்பி வைத்திருக்கலாமே?

அப்படியெல்லாம் செய்தால்தான் அஜீத் இந்த பூமியில் பிறந்த சராசரி மனுஷன் ஆகிவிடுவாரே?

ஒரு அவதார புருஷனை ஆங்கிரி பேட் ஆக்குறதே உங்களுக்கு பொழப்பா போச்சு!

Comments

comments