_18494 (1)

விவேகம் ரிலீசான நாளில் இருந்தே அது குறித்த நாராசமான விமர்சனங்களும், நல்ல நல்ல ஜால்ராக்களும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. படம் திரைக்கு வந்த இரண்டாம் நாளே, முன் பதிவு சார்ட், தன் முக்காட்டை மறைத்து பல் இளித்துவிட்டது. சேலம் நாமக்கல் போன்ற ஊர்களில் தலைவனின் மானம் காக்க போராடிய அஜீத் ரசிகர்கள் 100 ரூபாய் டிக்கெட்டை 40 ரூபாய்க்கு பிளாக்கில் விற்று இந்திய சினிமாவில் புதிய புரட்சி செய்தார்கள்.

இந்த அமளி துமளிகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவரது நேர் போட்டியாளரான விஜய்யை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறதாம் விவேகம் ரிசல்ட். ஏன்? இதே சாயலில் கவுதம் மேனன் ஒரு கதையை விஜய்யிடம் சொல்லி, அதை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தன் சிறு மூளை பெரு மூளை இரண்டையும் உபயோகித்து “இந்த மாதிரி கதையெல்லாம் எங்க பேன்ஸ்சுக்கு செட் ஆகாது” என்று நைசாக ஒதுங்கிவிட்டார் விஜய்.

இப்போது விவேகம் படத்தை ரசித்த(?) விஜய், “நல்லவேளை தப்பிச்சுட்டேண்டா சாமீய்” என்கிறாராம் தன் நண்பர்களிடம்.

இதே போல சந்தோஷப்படும் இன்னொரு ஜீவன், கவுதமாக கூட இருக்கலாம்! வெந்த பிறகுதானே தெரியுது… மாவு புளிப்பா, ருசியான்னு?

Comments

comments