NTlrg_20170819120126464581

விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் இரண்டு பேருக்கும் இடையில் தொழில் ரீதியான மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. அஜித் நடித்த விவேகம் படம் வெளியாகும் நேரத்தில் மெர்சல் படத்தின் இசைவெளியீடு நடப்பதும், மெர்சல் இசைவெளியீட்டு பரபரப்புக்கிடையில் விவேகம் படத்தின் டிரைலர் வெளியீடு எல்லாம் தற்செயல் அல்ல. மிக தெளிவாக திட்டமிட்டே ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற போட்டி நடப்பது கண்கூடாக தெரிகிறது.

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர், டிரைலர் யூடியூபில் சாதனை நிகழ்த்தியதாக சொல்லப்பட்ட அதே நேரத்தில், டுவிட்டரில் ‘மெர்சல்’ ஹேஷ்டேக் வார்த்தைக்கான ‘எமோஜி’ ஒன்றை அறிமுகப்படுத்தினர். ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் உருவம் அந்த எமோஜியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த ‘எமோஜி’ டெக்னாலஜியை டிவிட்டர் இந்தியாவுடன் இணைந்து இரண்டு படங்கள்தான் உருவாக்கியுள்ளன. சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படமும், ஷாருக் கானின் ‘ஜப் ஹாரி மெட் சேகல்’ படமும்தான் அவை. இந்திய அளவில் மூன்றாவது முறையாகவும், தென்னிந்திய அளவில் முதல்முறையாகவும் இந்த எமோஜி டெக்னாலஜியைப் பயன்படுத்திய படமாக ‘மெர்சல்’ இடம்பிடித்திருக்கிறது.

விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டநிலையில் இந்த எமோஜி டெக்னாலஜியை பயன்படுத்த முடியாமல்விட்டதை எண்ணி வருத்தத்தில் இருக்கிறதாம் விவேகம் படக்குழு மற்றும் அஜித்தின் ரசிகர்கள்.

Comments

comments