oD8F5b0Najith

அஜித்தின் விவேகம் படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் கொஞ்சம் கூட குறையவில்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் அதிகபட்சமாக ரூ.50, நகராட்சிகளில் ரூ.40,பேரூராட்சிகளில் ரூ.25, கிராமங்களில் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.120 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அரசு முறையாக விவேகம் படத்துக்கு வசூலிக்கவில்லை என சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 28 திரையரங்குகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Comments

comments