_KAMAL_HAASAN

ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கி வெற்றி கண்டவர் நடிகர் தனுஷ். மேலும் அப்படத்தின் இரண்டாம் பக்கத்தையும் அவரே இயக்கவுள்ளார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரும் , தாணு மாமனாருமான ரஜினியை இயக்க பெரும் விருப்பத்தோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள வேலை இல்லாத பட்டதாரி படம் நாளை வெளிவரவுள்ளது. மேலும் இதனை அடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வாடா சென்னை ஆகிய படங்கள் தயாரிப்பு பணியில் உள்ளது.

இந்நிலையில் மேலும் தனது இயக்குனர் விருப்பத்தைதெரிவித்துள்ளார் தனுஷ். அதில் ரஜினி நடிக்கும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்காக 15 ஒன்லைன் தயார் செய்து வைத்துள்ளதாகவும். வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அவரை இயக்குவேன் என்றும். தற்போழுது அவரது படத்தை தயாரிப்பதே தனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார்.

Comments

comments