_18494 (1)

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடியைக் கொட்டி தயாரித்து வரும் ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என சொல்லப்பட்டது.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் நடைபெற்று முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தநிலையில் தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

தணிக்கைக்கு தேதி குறிக்கும்வரை விவேகம் படத்தை பட்டைதீட்டும் பணியில் இறங்கினார் இயக்குநர் சிவா.

சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்ட அதிநவீன கருவிகள் கொண்ட நாக் ஸ்டுடியோவில் இதற்கான பணிகள் இரவுபகலாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், 31.07. 2017 திங்கள்கிழமை அன்று விவேகம் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்தனர்.

விவேகம் படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தகவலை அஜித்திடம் சொன்னாராம் இயக்குநர் சிவா.

அதைக் கேட்ட அஜித் அப்செட்டாகிவிட்டாராம்.

அஜித்தும், சிவாவும் ஏற்கனவே இணைந்த வீரம் படத்துக்கும், வேதாளம் படத்துக்கும் யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டு படங்களும் வசூல் ரீதியில் வெற்றியடைந்தன.

இந்த சென்ட்டிமெண்ட்டுக்கு மாறாக விவேகம் படத்துக்கு ‘யு/ஏ’ வழங்கப்பட்டதை அஜித் ரசிக்கவில்லை. அதை அபசகுனமாகவே நினைக்கிறாராம்.

எனவே, ரிவைசிங் கமிட்டிக்கு விவேகம் படத்தை அனுப்பும்படி இயக்குநர் சிவாவிடம் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக, தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் மிக எளிதாக அந்தப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துவிடுகிறது.

‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் யு சான்றிதழை வழங்கிவிடுகிறார்கள்.

எனவே கங்கை அமரன் இருக்க கவலை ஏன்? என்று சந்தோஷமாக பலரும் ரிவைசிங் கமிட்டிக்கு செல்கின்றனர். கடந்த வாரம் வெளியான விக்ரம் வேதா படம் கூட ரிவைசிங் சென்று வந்தது.

இந்த லாஜிக்கின் அடிப்படையில் ரிவைசிங் கமிட்டிக்குப் போனால் யு சான்றிதழ் கிடைப்பது உறுதி என்பதால் விவேகம் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப உள்ளனர்.

இந்த பிராசஸ் நடைபெற 10 நாட்கள் ஆகலாம் என்பதாலேயே, ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று வெளியாகும் என சொல்லப்பட்ட விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்கள் தள்ளி ஆகஸ்ட் 24 அன்று வெளியிட உள்ளனர்.

Comments

comments