சென்னை: நான் இனி பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை ஓவியா திரும்பி வர வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம். ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்துவிட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வருவது குறித்து ஓவியா கூறியிருப்பதாவது,

ஹாய். எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எனக்கு இவ்வளவு ஆதரவு, வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் நன்றி.

ரொம்ப கஷ்டமான விஷயம் நடந்து கொண்டிருக்கு. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியே வந்துட்டாங்க, சக்தி வந்துட்டாங்க. அவர்களின் நிலைமையை நினைத்து வருத்தமாக உள்ளது.

ஜூலி, சக்தியை கார்னர் செய்யாதீங்க. தப்பு பண்ணா தான் மனுஷன். ரேப், கொலை செய்தவர்களையே அரசு மன்னித்துவிடுகிறது. தயவு செய்து அவர்களை காயப்படுத்தாதீங்க. மற்றவர்களை காயப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு தேவையே இல்லை.

நான் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி செல்வேனா என்று பலர் கேட்டனர். ஒரு போட்டியாளராக நான் நிச்சயம் திரும்பிச் செல்ல மாட்டேன். இனிமே படங்களில் நீங்கள் என்னை பார்க்கலாம்.

எனக்காக படம் பார்க்க வேண்டாம். படம் நல்லா இருந்தால் பாருங்க. இல்லை என்றால் கேவலமாக காரித் துப்பிடுங்க. எனக்கு பிரச்சனையே இல்லை. கண்டிப்பாக படங்களில் நடிக்கப் போகிறேன்.

ஆரவுடன் காதல் இருக்கா, மன அழுத்தம் இருக்கா என்று பலர் கேட்டனர். மன அழுத்தம் எல்லாம் கிடையாது. உண்மையான காதல் தோற்காது. நீங்கள் என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். என் காதல் உண்மையானது. அதை நான் திரும்பப் பெறுவேன் என்றார் ஓவியா.

Comments

comments