5XYWX1hDsafadfafas

சுறா படத்தை விமர்சனம் செய்ததற்காக பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய் ரசிகர் ராம்குமார், தான் பாடம் கற்றுக் கொண்டதாக மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ஷாருக்கான் படம் தொடர்பாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், விஜய்யின் ‘சுறா’ படத்துடன் அந்தப் படத்தை ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். சர்ச்சைக்குரிய பதிவை அவர் நீக்கிய பின்னரும் ஆபாசக் கருத்துகளை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டதால், சென்னை காவல் ஆணையரிடம் தன்யா புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் ராம்குமார் என்ற இளைஞர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தன்யாவை ட்ரோல் (Troll) செய்வதற்காகவே ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை ராம்குமார்தான் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உருவாக்கிய ஹேஷ்டேக் கீழ் விஜய் ரசிகர்கள் பலரும் தன்யாவை வசைமாரி பொழிந்தனர்.

இந்நிலையில் ராம்குமார் தன்யாவை ட்ரோல் செய்ததை ஒப்புக் கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

“சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி யாரையும் ட்ரோல் செய்யாதீர். எனது நிலையே உங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.

எனது வீட்டுக்கு பொலிசார் வந்தனர். எனது தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். எனது துயர காலத்தில் என் குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவி செய்யவில்லை.

சமூக வலைதளத்தில் நம்மை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என நினைக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் கிண்டல் செய்தது பத்திரிகையாளரைத்தான் என்பது தனக்குத் தெரியாது என்றும், யாரோ அஜித் ரசிகரே விஜய்யை கிண்டல் செய்திருக்கிறார் என நினைத்து ஹேஷ்டேக் உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments

comments