Pp1uYIYJDFvXfDGUQAACAbQ

நான் எந்த காரணம் கொண்டும் எனது ரசிகர்கள்களை என்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்ளமாட்டேன். விளம்பர படங்களில் நடித்து நான் பயன்படுத்தாத ஒரு பொருளை என் ரசிகனை வாங்க சொல்லமாட்டேன். இந்த வார்த்தைளை சொல்லும் போது அவர் ஒரு சினிமா நடிகன். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு அவரை ஒரு நல்ல மனிதனாக பார்த்தார்கள் சினிமா ரசிகர்கள். அவரது பெயர் தான் அஜித்குமார்.

சமீபகாலமாக, சில அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களை ஏளனம் செய்வதும், அவரது ரசிகர்களை கிண்டல் செய்வதுமாக இருந்து வந்தனர். பல நேரங்களில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் அளவிற்கு சண்டைகள் நடப்பதையும் பார்த்திருக்கிறோம்.

ஆயினும், சம்பந்தப்பட்ட நடிகர்கள் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வந்தனர். ஆனால், சமீப காலமாக ரசிகர்கள் செயல் எல்லை மீற, அதிரடியாக தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அஜித்குமார்.

எந்த முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ, ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளங்களிலும் நடிகர் அஜித்குமார் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தபட்டிருக்கவில்லை. அவரது பெயரை பிரயோகித்து யாரையும் தகாத முறையில் விமர்சனம் செய்ய கூடாது எனவும். இது நாள் வரை தனது பெயரால் வெளியான தகாத விமர்சனங்களால் பாதிக்கபட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும்.

முக்கியமாக, எந்தவொரு அமைப்பு, நிறுவனம் அல்லது சின்னந்தையோ அஜித் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக இருந்தது அந்த அறிக்கை.

இவர் நடித்த விவேகம் திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையிலும், இப்படியான ஒரு அறிக்கை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தன் படம் வெளிவரும் நேரத்தில், பல நிறுவங்களுடன் கூட்டு வைத்துகொண்டு அந்த நிறுவனங்களில் விளம்பரங்களோடு அவர்களின் படத்தின் விளம்ரத்தையும் சேர்த்து கல்லா கட்டும் நடிகர்கள் ஒரு பக்கம், நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ரசிகர்களை அழைத்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு சாப்பாடு போட்டு குஷிப்படுத்தி அனுப்பும் நடிகர்கள் மறுபக்கம் உள்ள இந்த சினிமா துறையில்  எந்தவொரு அமைப்பு, நிறுவனம் அல்லது சின்னந்தையோ நான் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக அஜித் அறிக்கை வெளியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Comments

comments