83abc817896d80509cab34095a3b6c53

காவல் நிலையத்தில் தன் மீது புகார் கொடுத்த பக்கத்து வீட்டுப் பெண்ணை நடிகை கடித்துக் குதறினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகர்  10வது தெருவில் வசிப்பவர் மதுமிதா (30). காமெடி நடிகையான இவர் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’  படத்தில் பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘இதற்குத்தானே  ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்.

இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் உஷா(34).  மதுமிதாவுக்கும் உஷாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து  உஷா கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.  மதுமிதாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு காவல் நிலையம்  வருமாறு கூறிச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதுமிதா உஷாவிடம் மீண்டும்  தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் உஷாவின்  கையைக் கடித்துள்ளார். இதில் வலி தாங்காமல் அலறிய உஷா மதுமிதாவைப் பிடித்து  கீழே தள்ளிவிட்டார். இதில் மதுமிதாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து,  இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Comments

comments