dileep-12-1499851069

கொச்சி: கேரள நடிகை மானபங்க வழக்கில் சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு மூன்று திருமணங்கள் நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. மஞ்சுவாரியாருக்கு முன், உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியார். இரண்டாவது மனைவி காவ்யா மாதவன். காவ்யாவுடன் நெருங்கி பழகியதால்தான், திலீப்பை மஞ்சு விவாகரத்து செய்தார். மஞ்சுவை திருமணம் செய்வதற்கு முன், உறவினர் பெண்ணை திலீப் திருமணம் செய்ததாக தகவல் கசிந்துள்ளது. மஞ்சுவை திருமணம் செய்ததை அறிந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த போது, திலீப் சரிக்கட்டி விட்டதாகவும், அவரை வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வீடியோ? :

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகள், ‘பல்சர்’ சுனிலின் வக்கீல்களிடம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன்படி, வக்கீல் பிரதீஷ் சாக்கோவிடம் ஏற்கனவே விசாரிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நேற்று வக்கீல் ராஜு ஜோசப், ஆலுவா போலீஸ் கிளப்பில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். அவர், துாத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தார். அதனால், நடிகை மானபங்க வீடியோ காட்சிகள், தமிழகத்தில் மறைக்கப்பட்டுள்ளதா என விசாரிக்க போலீசார் துாத்துக்குடி செல்ல உள்ளனர்.

Comments

comments