[

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் வென்றவர் ஓவியா, காதல் தோல்வியில் ஏற்பட்ட மனஉளைச்சலால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

வெளியேறுவதற்கு முன்பாக நீச்சல்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்தப் புகாரை நசரேத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.

புகார் கொடுத்து சில நாள்கள் ஆகியும் இதுவரை காவல்துறை, ஓவியாவிடம் விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.

இதுதொடர்பாக பாலாஜி விசாரிக்க சென்ற போது, இரண்டு நாளில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓவியாவின் மேனேஜரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஓவியாவிடம் பொலிசார் விசாரணை நடத்தியதாவும், அணியில் இருந்தவர்களை ஏமாற்றவே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் ஓவியா கூறியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Comments

comments