r4FRLJuDcinemmma

பிரபல திரைப்பட நடிகரான பவன்கல்யாண் சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உத்தனம் பகுதியில் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டி ஹார்ட்வேர்டு பல்கலைக்கழக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன் பின் உத்தனம் பகுதிக்குச் சென்று பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள 100 கிராமங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

தற்போது வரை அந்த 100 கிராமங்களில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக சிறுநீரக நோயில் போராடி அழிந்து வரும் இந்த கிராம மக்களின் நோயைத் தீர்க்க பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

இதனால் தனது கட்சியில் தனிகுழு ஒன்றை அமைத்து சேவை செய்வதற்கு முற்பட்டுள்ளார். மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தது.

அங்கு சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவதற்கான காரணங்கள் பற்றி நிலம், நீர் ஆகியவற்றைப் பரிசோதனைகள் செய்துள்ளது.

அந்தக் குழு அளித்தத் தகவல்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்து தமது கட்சியும் பணியாற்றும் என்று நடிகர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.

Comments

comments