Kamal

முரசொலி பத்திரிக்கையின் பவள விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், தற்காப்பை விட தன்மானமே முக்கியம், தேசீய கீதம் உள்ள வரை திராவிடம் இருக்கும் என தெரிவித்தார். அதன்பிறகு தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் “விம்மாமல், பம்பாமல் ஆவன செய். புரட்சியின் வித்து தனி சிந்தனையே. ஓடி என்னை பின்தள்ளாதே, களைத்தெனைத் தாமதிக்காதே, கூடி நட வெல்வது நானல்ல… நாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பலருக்கு புரியவில்லை. அதாவது, “தயங்காமல் புரட்சி செய்ய தயராகுங்குள். அதற்கு தேவை நல்ல சிந்தனை. என்னை தாண்டி ஆர்வக்கோளாறில் ஏதாவது செய்து என்னை களைப்படைய வைக்காதீர்கள். என்னுடன் வாருங்கள் வெற்றி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும். என கமல் அவரது ரசிகர்களுக்கு சொல்வதாக பலரும் கருதினார்கள்.

Comments

comments