NTLRG_20170818043627740463

வெற்றிப் படம் கொடுத்து, நீண்ட நாட்களாகி விட்டதால், கட்டாய வெற்றிக்காக, கடுமையாக உழைத்து வருகிறார், விக்ரம். தமன்னாவுடன், விக்ரம் நடித்த, ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகும் துருவ நட்சத்திரம்படத்தில் நடிப்பதற்காக, மொத்தமாக, ஒரு மாத கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம், விக்ரம். இதன் படப்பிடிப்பு, வெளிநாடுகளில் நடக்கிறது. இந்த படம் முடிந்ததும், ஹரி இயக்கத்தில், சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் முழு வீச்சில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த மூன்று படங்களுமே, வித்தியாசமான கதையம்சம் உள்ளவை என்பதால், கட்டாயம் வெற்றி கிடைக்கும் என, நம்புகிறார், விக்ரம்.

‘ஒரு படம் தோல்வி அடைந்தாலே, கோலிவுட்டை விட்டு ஓரம் கட்டி விடுவர்; ரசிகர்களும் நம்மை மறந்து விடுவர்; அதனால், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டும்’ என, அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனராம், நண்பர்கள்.

Comments

comments