vijay-story_647_011117012955

தன் எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா நடிக்கவுள்ள இப்படை வெல்லும் என்ற படத்திற்காக வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளார்.

அதற்காக கடந்த சில நாட்களாக ஒலிப்பதிவு நடந்துள்ளது. இயக்குனர் கவுரவ் இந்த படத்தை இயக்கிவருகிறார்.

விஜய் சேதுபதி அடுத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சயீஸா நடிக்கவுள்ளார்.

 

Comments

comments