OaCFOVoisafdasfafa

சினிமா என்பது மிலிட்டரிக்காரன் தொழில் மாதிரி என என் கணவர் அல்வா வாசு அடிக்கடி சொல்வார் என அவரது மனைவி அமுதா கூறியுள்ளார்.

கல்லீரல் பிரச்சனையால் இறந்துபோன நடிகர் அல்வா வாசு 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், ஆனால் இவரது இறுதி சடங்கல் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளாதது ஒரு பெரிய குறையாக உள்ளது.

இதுகுறித்து அவர் மனைவி அமுதா கூறியதாவது, எங்களுக்கு யார்மேலயும் எந்த வருத்தமும் இல்லை. ஏன்னா, அவர் சினிமாவில் பிஸியாக இருந்தப்பவே, தீபாவளி, பொங்கலுக்குக்கூட எங்ககூட இருக்கமாட்டார்.

சினிமாங்கறது மிலிட்டரிக்காரன் தொழில் மாதிரி. 10 நாள் இந்த தொழில்ல இல்லன்னா மறந்துடுவாங்கன்னு சொல்வார். அவரைப் போலத்தான், அவருடன் நடிச்சவங்களையும் பார்க்கிறேன். சூழ்நிலை, வேலை காரணமாக வராம போயிருக்கலாம்.

நம் கஷ்டத்தை வைத்து அனுதாபம் தேடக்கூடாதுன்னு சொல்வார், அதனால் தான் 6 மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த போது கூட யாரிடமும் சொல்லவில்லை.

யாரு மனதையும் புண்படக் கூடாது என நினைத்தவர். அவரைப் போலத்தான் நாங்களும். யாரையும் குற்றம் சொல்ல விரும்பல என்று கண்கலங்கியுள்ளார் அவரது மனைவி அமுதா.

Comments

comments