yio4v4Oobidds

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் சமாளித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஓவியா, ஓவியா ஆர்மி என்ற தனி படையே உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஓவியா – ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு ஏகோபித்த அதரவு இருந்து வருகிறது.

இந்தச்சூழலில் ஓவியாவிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக போலீஸாரும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு என்ன ஆனது என்ற கேள்வி தொற்றிக் கொண்டுள்ளது. சமூகவலைதளங்களில் மீண்டும் ஓவியா பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க, இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றும், நேற்று ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 2-ம் தேதி பதிவு செய்யப்பட்டவை என்ற தகவலும் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதள பக்கங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த தொலைக்காட்சி இதுவரை எந்த ப்ரோமோ வீடியோவையும் வெளியிடவில்லை.இந்த தகவல்கள் குறித்து பதில் எதுவும் கூறமால் இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

Comments

comments